செய்திகள்

உலகக்கோப்பை சம்பளம், போனஸை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கினார் மப்பே

Published On 2018-07-18 15:05 GMT   |   Update On 2018-07-18 15:05 GMT
பிரான்ஸ் அணியின் இளம் வீரரான மப்பே தனது உலகக்கோப்பை சம்பளம் மற்றும் போனஸை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். #Mbappe
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் கடந்த மாதம் 14-ந்தேதி வரை கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இதில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணியில் 19 வயதே ஆன கிலியான் மப்பே இடம் பிடித்திருந்தார். இவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றார்.

உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் உலகக்கோப்பை தொடரில் கிடைக்கும் சம்பளம் மற்றும் போனஸை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு விளையாட்டு திறனை பயிற்சிக்கும் தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவதாக அறிவித்தார். அதன்படி மப்பே ஒரு போட்டிக்கு தலா 29 ஆயிரம் டாலர் சம்பளமாக பெற்றார்.



இதன்மூலம் 7 போட்டிகளில் விளையாடி இரண்டு லட்சத்து 3 ஆயிரம் டாலர் சம்பளமாக பெற்றார். உலகக்கோப்பையை வென்றதால் போனஸாக மூன்று லட்சத்து 50 ஆயிரம் டாலர் கிடைத்தது. இரண்டையும் சேரத்து கிடைத்த 5 லட்சத்து 53 ஆயிரம் டாலரை (3 கோடியே 80 லட்சம் ரூபாய்) தற்போது நன்கொடையாக வழங்கியுள்ளார்.
Tags:    

Similar News