செய்திகள்

குரோசியா கால்பந்து அணியை வரவேற்ற இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள்

Published On 2018-07-17 16:19 GMT   |   Update On 2018-07-17 16:19 GMT
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இரண்டாம் இடம் பிடித்த குரோசியா அணிக்கு அந்நாட்டின் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வரவேற்பு அளித்தனர். #WorldCup2018
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 14-ந்தேதி முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இந்த தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் குரோசியா அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லீக் சுற்றில் அர்ஜென்டினாவை 3-0 என துவம்சம் செய்தது. அதன்பின் நாக்அவுட், காலிறுதி மற்றும் அரையிறுதியை கடந்து முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.



ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் 2-4 என தோல்வியடைந்து வரலாற்றுச் சாதனையை தவறவிட்டது. என்றாலும் குரோசியா அணி வீரர்கள் அபார விளையாட்டிற்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.



அவர்கள் 2-ம் இடத்தோடு நேற்று சொந்த நாடு திரும்பினார்கள். குரோசியா தலைநகரான சக்ரெப்பில் கால்பந்து அணிக்கு அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது. குரோசியாவின் மக்கள் தொகை சுமார் 43 லட்சம்தான். இதில் இரண்டரை லட்சம் மக்கள் தலைநகரில் குவிந்து வரவேற்பு கொடுத்தார்கள். அத்துடன் வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள்.
Tags:    

Similar News