செய்திகள்

இந்தியா ஏ அணிக்கெதிராக 180 ரன்கள் குவித்து தனது இடத்தை ரிஜிஸ்டர் செய்தார் அலஸ்டைர் குக்

Published On 2018-07-17 12:24 GMT   |   Update On 2018-07-17 12:24 GMT
இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் 180 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனக்கான இடத்தை ரிஜிஸ்டர் செய்தார் அலஸ்டைர் குக் #INDA #Cook
இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.

இங்கிலாந்து லயன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பர்ன்ஸ், அலஸ்டைர் குக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அலஸ்டைர் குக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அடுத்து வந்த கப்பின்ஸ் 73 ரன்னும், தாவித் மலன் அரைசதமும் அடிக்க இங்கிலாந்து லயன்ஸ் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது.

அலஸ்டைர் குக் 154 ரன்னுடனும், தாவித் மலன் 59 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அலஸ்டைர் குக் 180 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தாவித் மலன் 74 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இங்கிலாந்து லயன்ஸ் 112.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 380 ரன்கள் குவித்து முதல இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.



33 வயதாகும் அலஸ்டைர் குக் இங்கிலாந்து அணிக்காக நீண்டகாலமாக விளையாடி வருகிறார். சமீப காலமாக அவரது ஆட்டம் சிறப்பானதாக அமையவில்லை. ஆஷஸ் தொடரில் 0-4 என இங்கிலாந்து தோல்வியடைந்தபோது, மெல்போர்ன் டெஸ்டில் மட்டும் இரட்டை சதம் அடித்தார். இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்டில் விளையாடியது. அப்போதும் பெரிய அளவில் ஸ்கோர் அடிக்கவில்லை. தற்போது இந்திய ‘ஏ’ அணிக்கெதிராக 180 ரன்கள் குவித்ததன் மூலம் இந்தியாவிற்கு எதிரான இங்கிலாந்து அணியில் தனது பெயரை ரிஜிஸ்டர் செய்துள்ளார்.
Tags:    

Similar News