செய்திகள்

கவுன்ட்டி கிரிக்கெட்- சோமர்செட் அணியுடன் பாகிஸ்தான் வீரர் அசார் அலி ஒப்பந்தம்

Published On 2018-07-17 11:42 GMT   |   Update On 2018-07-17 11:42 GMT
பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான அசார் அலி கவுன்ட்டி அணியான சோமர்செட் உடன் ஒப்பந்தம் செய்துள்ளார். #CountyCricket
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரென்ஷா. இவர் கேமரூன் பான்கிராப்ட்டிற்குப் பதிலாக கவுன்ட்டி அணியான சோமர்செட் அணிக்காக விளையாடினார். சோமர்செட் அணிக்காக மூன்று சதங்கள் அடித்த ரென்ஷாவின் கைவிரலில் காயம் ஏற்பட்டது.



இதனால் ரென்ஷா சோமர்செட் அணியில் இருந்து விலகியுள்ளார். தற்போது அவருக்குப் பதிலாக பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த தொடக்க வீரரான அசார் அலியை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சீசன் முடியும்வரை அசார் அலி சோமர்செட் அணிக்காக விளையாட இருக்கிறார்.
Tags:    

Similar News