செய்திகள்

கால்பந்து வெற்றியை வீரர்களுடன் ஆட்டம்போட்டு கொண்டாடிய குரோசிய பெண் அதிபர்

Published On 2018-07-12 14:26 GMT   |   Update On 2018-07-12 14:26 GMT
இறுதிப் போட்டிக்கு நுழைந்த சந்தோசத்தில் குரோசிய பெண் அதிபர் வீரர்களுடன் சேர்ந்து ஆட்டம்போட்டு சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார். #WorldCup2018
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து - குரோசியா அணிகள் பலப்ரீட்சை நடத்தின. இதில் 2-1 என குரோசியா இங்கிலாந்தை வீழ்த்தி பிபா கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியை குரோசியா வீரர்கள் மட்டுமல்ல, குரோசியா நாடே கொண்டாடி வருகிறது.

குரோசியா நாக்அவுட் போட்டிகளை காண அந்நாட்டு பெண் அதிபரான கொலிண்டா கிராபர்-கிட்டாரோவிச் ரஷியா வந்துள்ளார். அவர் மைதானத்தில் அமர்ந்து போட்டியை நேராக கண்டுகளிப்பதுடன் வீரர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார். காலிறுதியில் ரஷியாவை பெனால்டி ஷூட்அவுட் முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியபோது, வீரர்கள் மற்றம் பயிற்சியாளர்களை நேரில் சென்று பாராட்டினார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் குரோசியா வெற்றி பெற்றதும், வீரர்களை அறைக்குச் சென்று அவர்களுடன் சந்தோச மிகுதியில் ஆட்டம்போட்டார். நாட்டின் பெண் அதிபர் ஒருவர் வீரர்களுடன் ஆட்டம் போட்ட  வீடியோ வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News