செய்திகள்

36 போட்டியில் 20 பெனால்டி- VAR முறையால் படைத்த வரலாற்று சாதனை

Published On 2018-06-26 18:10 IST   |   Update On 2018-06-26 18:10:00 IST
லீக் ஆட்டங்கள் முடிவதற்குள்ளேயே 36 போட்டிகளில் 20 பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது ரஷியா உலகக்கோப்பை. #WorldCup2018
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையில் வீடியோ அசிஸ்டன்ட் ரெஃப்ரீஸ் (VAR-Video Assistant Referees) என்ற முறை முதன்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.



பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் VAR, உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 பெனால்டிகளை வழங்கியுள்ளது. இதுவரை முடிந்துள்ள 36 போட்டிகளில்தான் இந்த 20 பெனால்டி. இன்னும் லீக் ஆட்டங்கள், நாக்அவுட், காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் உள்ளன. இதனால் அதிக அளவில் பெனால்டி வாய்ப்பை கொடுக்கும் எனத் தெரிகிறது.



இதற்கு முன் 1990, 1998 மற்றும் 2002 உலகக்கோப்பையில் 18 பெனால்டி என்பதுதான் அதிகபட்சமாக இருந்தது. இதை ரஷியா உலகக்கோப்பை 36 போட்டிகளிலேயே முறியடித்துள்ளது.
Tags:    

Similar News