செய்திகள்

ஒருநாள் போட்டியில் இரண்டு புதுப்பந்து என்பது பேரழிவிற்கான வழி- சச்சின் காட்டம்

Published On 2018-06-22 12:09 GMT   |   Update On 2018-06-22 12:09 GMT
ஒருநாள் போட்டியில் 400 ரன்களுக்கு மேல் குவித்து, பவுலர்களை திண்டாட வைப்பதற்கு இரண்டு புதிய பந்து முறைதான் காரணம் என சச்சின் கூறியுள்ளார். #ENGvAUS
ஒருநாள் கிரிக்கெட்டில் 463 போட்டிகளில் 49 சதங்களுடன், 18 ஆயிரம் 426 ரன்கள் குவித்து இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்ற அழைக்கப்படும் சச்சின் தெண்டுகர் அசைக்க முடியாத சாதனைப் படைத்துள்ளார். இவர் 1989-ம் ஆண்டு முதல் 2012 வரை சுமார் 23 வருடங்கள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினார். இவரது காலக்கட்டத்தில் விதிமுறை, முன்னணி பந்து வீச்சாளர்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு ரன்கள் குவிப்பது எளிதான காரியம் அல்ல.

ஆனால், டி20 கிரிக்கெட் அறிமுகம் படுத்திய பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் சுவாரஸ்யம் கூட்டுவதற்காக பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் ஒன்று இரண்டு புதிய பந்துகள் என்பது. இரு முனைகளிலும் இருந்து தலா ஒரு பந்து மூலம் பந்து வீசப்படும். இதனால் ஒரு பந்தில் 25 ஓவர்கள்தான் வீசமுடியம். இதனால் கடைசி கட்டத்தில் ரிவர்ஸ் ஸ்விங்கை பார்க்க முடிவதில்லை. இதை பயன்படுத்தில் சர்வசாதரணமாக தற்போது 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடரின்போது இங்கிலாந்து 481 ரன்கள் குவித்து சரித்திர சாதனைப் படைத்துள்ளது.

இரண்டு புதிய பந்து முறைதான் இதுபோன்று 400 ரன்களுக்கு மேல் எளிதாக அடிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று சச்சின் தெண்டுல்கர் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஒருநாள் போட்டியில் இரண்டு புதிய பந்துகள் என்பது பேரழிவிற்கான சரியான முறை. இரண்டு பந்துதிற்கும் பழைய பந்தாக மாறி ரிவர்ஸ் ஸிவிங் ஆக நேரம் போதுமானதாக இல்லை. நாம் ஒருநாள் போட்டியில் டெத்ஓவர்களை உள்ளடக்கிய கடைசி கட்டத்தில் ரிவர்ஸ் ஸ்விங்கை பார்க்க முடிவதில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News