செய்திகள்

ஐசிசியின் தடையை எதிர்த்து இலங்கை கேப்டன் சண்டிமல் மேல்முறையீடு

Published On 2018-06-21 09:02 GMT   |   Update On 2018-06-21 09:02 GMT
2-வது டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார் சண்டிமல். #WIvSL #chandimal
வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இந்த டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆட்டம் இரண்டு மணி நேரம் தடைபட்டது. இதையடுத்து அந்த போட்டி முடிந்தபின் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையின் முடிவில் சண்டிமல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 2 தகுதி நீக்க புள்ளிகள் வழங்கப்பட்டு, ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக பகல்-இரவு ஆட்டமாக நடைபெற இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.



இந்நிலையில் இலங்கை கேப்டன் சண்டிமல் ஐசிசி எடுத்துள்ள தடைஉத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். சண்டிமல் மேல்முறையீட்டை விசாரிக்க ஐசிசி சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கும். இவர் விசாரணை நடத்தி இறுதி தீர்ப்பு வழங்குவார். இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் வருகிற 23-ந்தேதி (நாளைமறுநாள்) தொடங்குகிறது. #WIvSL #SLvWI #DineshChandimal #BallTampering
Tags:    

Similar News