செய்திகள்

ஆஸ்திரேலியாவின் படுதோல்வியால் அதிர்ச்சிக்குள்ளான வார்னே, மைக்கேல் கிளார்க்

Published On 2018-06-20 09:57 GMT   |   Update On 2018-06-20 09:57 GMT
இங்கிலாந்திற்கு எதிராக ஆஸ்திரேலியா 242 ரன்னில் படுதோல்வியடைந்தது வார்னே, மைக்கேல் கிளார்க்கிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ENGvAUS
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. பேர்ஸ்டோவ் (92 பந்தில் 139), அலெக்ஸ் ஹேல்ஸ் (92 பந்தில் 147), மோர்கன் (30 பந்தில் 67), ஜேசன் ராய் (61 பந்தில் 82) ஆகியோரின் அதிரடியால் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 37 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 239 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 51 ரன்னும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 44 ரன்களும் அடித்தனர். மொயீன் அலி (3), அடில் ரஷித்தின் சுழலில் சிக்கி 242 ரன்னில் ஆஸ்திரேலியா படுதோல்வியடைந்ததால் முன்னாள் ஜாம்பவான்கள் ஷேன் வார்னே, மைக்கேல் கிளார்க் ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவர்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News