செய்திகள்

அறிமுக டெஸ்டில் மிகக் குறைந்த ஓவர்களில் ஆல்அவுட் ஆகிய ஆப்கானிஸ்தான்

Published On 2018-06-15 09:58 GMT   |   Update On 2018-06-15 09:58 GMT
அறிமுக டெஸ்டில் மிகக் குறைந்த ஓவர்களிலேயே ஆல்அவுட் ஆகிய முதல் அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது.#INDvAFG
ஐசிசி கடந்த வருடம் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாட அனுமதி வழங்கியது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் தனது வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக விளையாட விரும்பியது.

இந்தியாவும் ஆப்கானிஸ்தானுடன் முதல் டெஸ்டில் விளையாட சம்மதம் தெரிவித்தது. அதன்படி இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் பெங்களூருவில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 109 ரன்னில் சுருண்டது. அஸ்வின் 4 விக்கெட்டும், இசாந்த் ஷர்மா, ஜடேஜா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

அதுபோக 27.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் மிகவும் குறைந்த ஓவர்களை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது.



வங்காள தேசம் 2-வது இன்னிங்சில் 46.3 ஓவரில் சுருண்டது மிகவும் குறைந்த ஓவர்களை சந்தித்த அணியாக இருந்தது. தற்போது ஆப்கானிஸ்தான் முதல் இடத்திற்கு வந்துள்ளது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 47.1 ஓவரில் சுருண்டு 3-வது இடத்திலும், அயர்லாந்து 47.2 ஓவரில் சுருண்டு 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 58.2 ஓவரில் சுருண்டு 5-வது இடத்திலும், இந்தியா 59.3 ஓவரில் சுருண்டு 6-வது இடத்திலும், நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 60.3 ஓவரில் சுருண்டு 7-வது இடத்திலும், இங்கிலாந்து 66.1 ஓவரில் சுருண்டு 8-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 68 ஓவரில் சுருண்டு 9-வது இடத்திலும் உள்ளது.
Tags:    

Similar News