செய்திகள்

ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் கோலாகல கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது

Published On 2018-06-14 20:24 IST   |   Update On 2018-06-14 20:24:00 IST
ரஷிய உலகக் கோப்பை கால்பந்து தொடர் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸின் பாடலுடன் கோலாகல கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. #FIFA2018 #worldCup
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.

இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ரஷியா - சவுதி அரேபியா பலப்பரீட்சை நடத்துகின்றன.



முன்னதாக இரவு 8 மணிக்கு கோலாகலமான தொடக்க விழாவுடன் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளித்தார். அப்போது பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அதன்பின் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் நடைபெற்றது.
Tags:    

Similar News