செய்திகள்

மழையால் ஆட்டம் பாதிப்பு - இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள்

Published On 2018-06-14 09:35 GMT   |   Update On 2018-06-14 09:35 GMT
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. 1 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. #INDvAFG
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் பெங்களூருவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

தவான் அதிரடியாக விளையாட முரளி விஜய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி 64 பந்தில் 50 ரன்னைத் தொடடது. தவான் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் 47 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா 19.4 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 25.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

தொடக்க வீரர் தவான் 87 பந்தில் 18 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார். இவரது சதத்தால் இந்தியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 27 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 158 ரன்கள் குவித்தது. தவான் 104 ரன்களுடனும், முரளி விஜய் 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய தவான் 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை யாமின் அஹ்மத்சாய் வீசினார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய என்ற வீரர் பெருமையை பெற்றார்.



அடுத்து முரளி விஜய் உடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். முரளி விஜய் 80 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முரளி விஜய் சதத்தை நெருங்கிய வேளையில் மழை குறுக்கீட்டது.

இதனால் இந்தியா 45.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் தேனீர் இடைவேளை விடப்பட்டது. அப்போது முரளி விஜய் 94 ரன்களும், லோகேஷ் ராகுல் 33 ரன்களும் எடுத்திருந்தனர்.
Tags:    

Similar News