செய்திகள்

தலையில் முக்காடு அணிய மறுத்து ஆசிய செஸ் போட்டியில் இருந்து விலகிய இந்திய வீராங்கனை

Published On 2018-06-13 12:20 IST   |   Update On 2018-06-13 12:20:00 IST
ஈரான் நாட்டில் பெண்கள் தலையில் முக்காடு அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாடில் நடக்கவுள்ள ஆசிய செஸ் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை விலகியுள்ளார். #SoumyaSwaminathan #Chess
புனே:

ஆசிய அணிகள் பிரிவு செஸ் போட்டி ஈரான் நாட்டில் உள்ள ஹமதான் நகரில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை நடக்கிறது.

இந்தப் போட்டியில் விளையாட இருந்த இந்தியாவின் 5-ம் நிலை வீராங்கனை சவுமியா சுவாமிநாதன் அதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் தலையில் முக்காடு அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முக்காடு அணிய மாட்டேன் என்று கூறி அவர் விலகியுள்ளார். இது தொடர்பாக 29 வயதான சவுமியா கூறியதாவது:-

தலையில் முக்காடு அல்லது புர்கா அணிய வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை.கட்டாயம் அணிய வேண்டும் என்பது எனது அடிப்படை உரிமைக்கு எதிரானது. இதனால் ஈரானில் நடைபெறும் ஆசிய அணிகள் பிரிவு போட்டியில் பங்கேற்க மாட்டேன்.



இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சவுமியா உலக ஜூனியர் பட்டத்தை வென்றவர். உலக தர வரிசையில் தற்போது 97-வது இடத்தில் இருக்கிறார்.#SoumyaSwaminathan #Chess
Tags:    

Similar News