செய்திகள்

கனடா டி20 லீக்- ஸ்மித்தை மனதார வரவேற்கிறேன்- டேரன் சமி

Published On 2018-06-12 15:19 IST   |   Update On 2018-06-12 15:19:00 IST
கனடா டி20 லீக் தொடரில் விளையாட இருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தை மனதார வரவேற்கிறேன் என்று டேரன் சமி தெரிவித்துள்ளார். #GT20CL
குளோபல் டி20 கனடா லீக் கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 28-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் டொராண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், இரண்டு முறை டி20 கோப்பையை ருசித்தவரும் ஆன டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால தடைபெற்ற ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் இடம்பிடித்துள்ளார்.

அவரை டேரன் சமி மனதார வரவேற்றுள்ளார். இதுகுறித்து டேரன் சமி கூறுகையில் ‘‘நாம் எல்லோரும் நமது வாழ்க்கையில் சில தவறுகளை செய்திருப்போம். இது விளையாட்டில் மட்டுமல்ல. பொதுவான விஷயத்திலும் கூட.

உண்மையிலேயே ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக கிரிக்கெட் வீரர். அவரை போன்ற ஒருவர் யாரென்றாலும் என்னுடைய அணியில் எந்த நாளிலும் சேர்த்துக் கொள்வேன். என்னுடைய அணியில் இதுபோன்ற சிறந்த வீரர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.



தென்ஆப்பிரிக்காவில் என்ன செய்தாரோ, அதற்கான தண்டனையை சந்தித்து வருகிறார். தேசிய அணியின் கேப்டனாக செயல்படும் நபர்தான் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது அவரது சொந்த அணி மாதிரி. மைதானத்தில் அவரது செயலுக்காக பொறுப்பை எடுத்துக் கொண்டார்’’ என்றார்.
Tags:    

Similar News