செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 371 ரன் குவித்தது ஸ்காட்லாந்து

Published On 2018-06-10 14:55 GMT   |   Update On 2018-06-10 14:55 GMT
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. #SCOTvENG
ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி கடைக்கோடியில் இருக்கும் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஒரேயொரு போட்டி இன்று விளையாடி வருகிறது. இந்த ஆட்டம் எடின்பர்க்கில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணியின் கிராஸ், கோயெட்சர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கிராஸ் 39 பந்தில் 48 ரன்களும், கோயெட்சர் 49 பந்தில் 58 ரன்களும் சேர்த்தனர்.

அதன்பின் வந்த மெக்லியோட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 94 பந்தில் 16 பவுண்டரி, 3 சிக்சருடன் 140 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்கவும், அவருக்கு துணையாக முன்சே 51 பந்தில் 55 ரன்கள் சேர்க்கவும் ஸ்காட்லாந்து 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.



இங்கிலாந்தின் முன்னணி பந்து வீச்சாளர்களான மார்க் வுட் 71 ரன்னும், டேவிட் வில்லே 72 ரன்னும், அடில் ரஷித் 72 ரன்னும், பிளங்கெட் 85 ரன்னும், மொயீன் அலி 66 ரன்களும் விட்டுக் கொடுத்தனர்.

பின்னர் 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News