செய்திகள்

டோட்டன்ஹாம் ஓப்பந்தத்தை 2024 வரை நீட்டித்தார் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன்

Published On 2018-06-08 20:58 IST   |   Update On 2018-06-08 20:58:00 IST
இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டனான ஹாரி கேன் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ஒப்பந்தத்தை 2024 வரை நீட்டித்துள்ளார். #Harry Kane
இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டன் ஹாரி கேன். 24 வயதான ஹாரி கேன் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக 41 கோல்கள் அடித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முன்னணி அணிகள் இவரை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தது.



ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான ரியல் மாட்ரிட் அணிக்கு ஹாரி கேன் செல்ல இருப்பதாக செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் ஹாரி கேன் டோட்டன்ஹாம் உடனான ஒப்பந்தத்தை மேலும் 6 ஆண்டுகள், அதாவது 2024 வரை நீட்டித்துள்ளார். இதனால் தன்னைச் சுற்றிய வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
Tags:    

Similar News