செய்திகள்

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனான கேரி வில்சன் நியமினம்

Published On 2018-06-06 19:28 IST   |   Update On 2018-06-06 19:28:00 IST
அயர்லாந்து கிரிக்கெட் அணியின் டி20 போட்டிகளுக்கான புதிய கேப்டனான கேரி வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார். #IrelandT20Captain #GaryWilson

டப்லின்:

அயர்லாந்து கிரிக்கெட் வீரர் வில்லியம் போர்டர்பீல்ட் அனைத்து வகை போட்டிகளுக்கும் கேப்டனாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்துவதற்காக டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக போர்டர்பீல்ட் சமீபத்தில் அறிவித்தார்.

இதையடுத்து அயர்லாந்து டி20 அணியின் புதிய கேப்டனாக கேரி வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை 53 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 



ஜூன் 12-ம் தேதி தொடங்க உள்ள அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து இடையேயான முத்தரப்பு டி20 தொடரில் இருந்து கேரி வில்சன் கேப்டனாக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முத்தரப்பு டி20 தொடருக்கான அயர்லாந்து அணி: கேரி வில்சன் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, பீட்டர் சேஸ், ஜார்ஜ் டாக்ரெல், பேரி மெக்கர்த்தி, கெவின் ஓ பிரையன், வில்லியம் போர்டர்பீல்ட், ஸ்டூவர்ட் போயன்டர், பாய்ட் ரான்கின், ஜேம்ஸ் ஷனோன், சிமி சிங், பால் ஸ்டிர்லிங், ஸ்டூவர்ட் தாம்ப்சன், கிரெய்க் யங். #IrelandT20Captain #GaryWilson
Tags:    

Similar News