செய்திகள்

தென்னாப்ரிக்கா அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக காகிசோ ரபாடா தேர்வு

Published On 2018-06-04 02:53 IST   |   Update On 2018-06-04 02:53:00 IST
தென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #KagisoRabada #SouthAfrica #CricketerOfTheYear

ஜொகன்னஸ்பர்க்:

தென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்து வருபவர் காகிசோ ரபாடா. 23 வயதாகும் இவர் 2018-ம் ஆண்டுக்கான தென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரபாடா தென்னாப்ரிக்கா அணியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னதாக ஹாசிம் அம்லா, ஜாக்கஸ் கல்லிஸ், மகாயா நிதினி, டி வில்லியர்ஸ் உள்ளிட்டோர் இரண்டு முறை சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ரபாடா, 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிராக கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற போட்டியிலும், டெஸ்ட் போட்டியில் 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவிற்கு எதிரான போட்டியிலும் அறிமுகம் ஆனார்.



2017-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஐ.சி.சி.யின் சிறந்த டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். தற்போது அவர் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்திலும், ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஏழாவது இடத்திலும் உள்ளார். #KagisoRabada #SouthAfrica #CricketerOfTheYear
Tags:    

Similar News