செய்திகள்

போட்டியில் கிடைக்கும் வருமானத்தை கிரிக்கெட் வளர்ச்சிக்காக வழங்குகிறார் ஸ்மித்

Published On 2018-06-01 17:28 IST   |   Update On 2018-06-01 17:28:00 IST
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித், கிரிக்கெட் போட்டியின் மூலம் கிடைக்கும் பணத்தை கிரிக்கெட் வளர்ச்சிக்காக வழங்குகிறார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித், கிரிக்கெட் போட்டியின் மூலம் கிடைக்கும் பணத்தை கிரிக்கெட் வளர்ச்சிக்காக வழங்குகிறார்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் திகழ்ந்தவர் ஸ்டீவ் ஸ்மித். ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

கேப்டவுனில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கேப்டனான ஸ்மித்திற்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது. தற்போது சர்வதேச போட்டியில் விளையாட தடை இருந்தாலும் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



இந்த மாதம் நடைபெற இருக்கும் குளோபல் டி20 கனடா லீக்கில் விளையாட இருக்கிறார். இதில் கிடைக்கும் வருமானத்தை அடிமட்டத்தில் இருந்து கிரிக்கெட்டை வளர்க்கும் திட்டத்திற்கு (grassroots cricket programs) வழங்க முடிவு செய்துள்ளார். கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு வருமானத்தை வழங்குகிறார்.
Tags:    

Similar News