செய்திகள்

பாலிவுட் நடிகையுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் காதலா?

Published On 2018-05-31 16:04 IST   |   Update On 2018-05-31 16:04:00 IST
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் இந்தி நடிகையை காதலிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் கேஎல் ராகுல். பெங்களூரைச் சேர்ந்த இவர், ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதிரடியாக விளையாடி அனைவருடைய கவனைத்தையும் ஈர்த்தார்.

தற்போது இவர் இந்தி நடிகை நிதி அகர்வாலை காதலிப்பதாகக் கூறப்படுகிறது. ஐதராபாத்தில் பிறந்து கர்நாடகாவில் வளர்ந்த நிதி அகர்வாலும் கேஎல் ராகுலும் நட்பாகப் பழகி வந்தனர் என்றும் பிறகு காதலில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.



சமீபத்தில் இருவரும் மும்பை விமான நிலையத்தில் ஒன்றாக சுற்றியபோது மீடியா கண்ணில் பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் ராகுல் ரசிகர்கள் பக்கத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன

நிதி அகர்வால் முன்னா மைக்கேல், டாய்லெட் ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். சவ்யா சாட்சி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்தக் காதல் பற்றி இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை.

Tags:    

Similar News