செய்திகள்

வங்காள தேச அணியில் முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு பதில் அபுல் ஹசன் சேர்ப்பு

Published On 2018-05-30 19:42 IST   |   Update On 2018-05-30 19:42:00 IST
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வங்காள தேச அணியில் அபுல் ஹசன் சேர்க்கப்பட்டுள்ளார். #AFGvBAN
ஆப்கானிஸ்தான் - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் டேராடூனில் ஜூன் 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான வங்காள தேச அணியில் வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஜூர் ரஹ்மான் இடம்பிடித்திருந்தார்.

காயத்தால் முஸ்டாபிஜூர் ரஹ்மான் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளரான அபுல் ஹசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



அபுல் ஹசன், தன்னுடைய கடைசி நான்கு டி20 போட்டிகளிலும் பாகிஸ்தானை எதிர்த்து 2012-ல் விளையாடியுள்ளார். ஆப்கானிஸ்தான் தற்போது டி20 தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளது.
Tags:    

Similar News