செய்திகள்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறுவேன்- மோர்கன் நம்பிக்கை

Published On 2018-05-30 17:09 IST   |   Update On 2018-05-30 17:09:00 IST
உலக லெவன் அணியில் இருந்து விலகிய மோர்கன் ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். #ENGvAUS
இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக இருப்பவர் மோர்கன். இவர் மிடில்செக்ஸ் கவுன்ட்டி அணிக்காக விளையாடி வருகிறார். ராயல் லண்டன் ஒருநாள் கோப்பைக்கான தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோமர்செட் அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாடினார். அப்போது பீல்டிங் செய்யும்போது வலது கை மோதிர விரலில் முறிவு ஏற்பட்டது.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான உலக லெவன் அணியில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.



இந்த தொடர் ஜூன் 13-ந்தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியா தொடர் தொடங்குவதற்கு முன்பு காயம் குணமடைந்து தயாராகிவிடுவேன் என்று மோர்கன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News