செய்திகள்

மும்பை தகுதி பெறாததால் பிரீத்திஜிந்தா மகிழ்ச்சி- வைரலாகும் வீடியோ

Published On 2018-05-21 07:17 GMT   |   Update On 2018-05-21 07:17 GMT
மும்பை இந்தியன்ஸ் அணி ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறாததால் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை பிரீத்தி ஜிந்தா மகிழ்ச்சி அடைந்து உள்ளார்.#IPL2018 #PreityZinta #MI
புனே:

ஐ.பி.எல். போட்டியில் ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழையும் 4-வது அணி குறித்து முடிவு செய்தவற்கான இரண்டு ஆட்டங்களும் நேற்று நடந்தது.

இதன் முதல் ஆட்டத்தில் டெல்லி அணியிடம் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் தோற்றது. இதனால் மும்பை அணி வெளியேற்றப்பட்டது.

புனேயில் நடந்த 2-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சென்னையிடம் வீழ்ந்தது. இதனால் பஞ்சாப் அணியும் வெளியேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 4-வது அணியாக ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறாததால் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை பிரீத்தி ஜிந்தா மகிழ்ச்சி அடைந்து உள்ளார்.

“மும்பை அணி ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழைய முடியாமல் போனது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பிரீத்திஜிந்தா கூறியதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி இந்தப்போட்டி தொடரில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடியது. கடைசியாக ஆடிய 5 ஆட்டத்திலும் தோற்றதால் அந்த அணி ‘பிளேஆப்’ வாய்ப்பை இழந்து வெளியேறியது.

பஞ்சாப்பின் மோசமான பேட்டிங் நிலைக்கு பிரீத்தி ஜிந்தா காரணம் என்று கூறினால் அது மிகையாகாது. வீரர்கள் தேர்வில் தலையிட்டதால் அணிக்குள் சலசலப்பு உருவானது. அணியின் ஆலோசகர் ஷேவாக்குடன் அவருக்கு ஏற்பட்ட மோதல் அணியை பெரிதும் பாதித்தது.#IPL2018 #PreityZinta #MI


Tags:    

Similar News