செய்திகள்

கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும் வழக்கத்தை மாற்ற ஐசிசி திட்டம்

Published On 2018-05-17 20:15 GMT   |   Update On 2018-05-17 20:15 GMT
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பின்பற்றப்பட்டு வரும் டாஸ் போடும் வழக்கத்தை மாற்றுவது குறித்து ஐசிசி ஆலோசனை நடத்தி வருகிறது. #ICC #ScrapCoinToss

துபாய்:

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், போட்டியை நடத்தும் நாடு அந்த அணிக்கு ஏற்றவாறு பிட்ச் அமைத்து கொள்கின்றன. இதனால் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் அணிகள், அந்த நாட்டு மைதானத்தின் பிட்ச் தன்மை குறித்து புரிந்து கொள்வதில் பல சிரமங்கள் உள்ளன. 

இதனால் வெளிநாடுகளுக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட செல்லும் அணி டாஸ் மூலம் மட்டும் தங்கள் அணி பேட்டிங் செய்வதா, பவுலிங் செய்வதா என்ற முடிவை எடுக்க முடிகிறது. இது போட்டியை நடத்தும் அணிக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. இதனால் போட்டி, போட்டியை நடத்தும் அணியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது வெளிநாட்டில் இருந்து விளையாட செல்லும் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது. 

இதன்காரணமாக கிரிக்கெட் போட்டிகளின் போது டாஸ் போடும் முறையை மாற்ற ஐசிசி ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்வது யார் என்பதை எதிரணியினர் தீர்மானிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனையை அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சோதித்துப் பார்க்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. #ICC #ScrapCoinToss
Tags:    

Similar News