செய்திகள்

கிரிஸ்மான் சிறப்பான ஆட்டத்தால் ஐரோப்பா லீக் கோப்பையை வென்றது அட்லெடிகோ மாட்ரிட்

Published On 2018-05-17 09:30 GMT   |   Update On 2018-05-17 09:30 GMT
மார்சைல் அணிக்கெதிரான ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் 3-0 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. #AtleticoMadrid
ஐரோப்பா லீக் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்யூ டி மார்சைல் - அட்லெடிகோ டி மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அட்லெடிகோ மாட்ரிட் அணியின் முன்னணி வீரரான கிரிஸ்மான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் கிரிஸ்மான் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் அட்லெடிகோ மாட்ரிட் 1-0 என வெற்றி பெற்றது.

2-வது பாதி நேரத்திலும் கிரிஸ்மான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். 89-வது நிமிடம் காபி ஒரு கோல் அடிக்க 3-0 என அட்லெடிகோ டி மாட்ரிட் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.



கடந்த 2012-ல் அத்லெடிக் பில்பாயோ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் தற்போதுதான் அட்லெடிகோ டி மாட்ரிட் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
Tags:    

Similar News