ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2018 - ஆர்.சி.பி.யை வீழ்த்தி பிளே ஆப்ஸ் சுற்றை உறுதி செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

Published On 2018-05-07 23:52 IST   |   Update On 2018-05-07 23:52:00 IST
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி பிளே ஆப்ஸ் சுற்றை உறுதி செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. #IPL2018 #SRHvRCB
ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றறது. சன்ரைசர்ஸ் இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஐதராபாத் அணியின் ஹேல்ஸ், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ஹேல்ஸ் 5 ரன்னிலும், தவான் 13 ரன்னிலும், மணிஷ் பாண்டே 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 4-வது விக்கெட்டுக்கு இணைந்த கேன் வில்லியம்சன் - ஷாகிப் அல் ஹசன் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

கேன் வில்லியம்சன் 39 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷாகிப் அல் ஹசன் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார்.



இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 146 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்களூர் அணி சார்பில் முகமது சிராஜ், டிம் சவுத்தி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மனன் வோரா, பர்திவ் படேல் இறங்கினர்.

வோரா 8 ரன்னிலும், பர்திவ் படேல 20 ரன்னிலும் அவுட்டாகினர். அவர்களை தொடர்ந்து இறங்கிய கேப்டன் விராட் கோலி 30 பந்தில் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார். டி வில்லியர்ஸ் 5 ரன்னிலும், மொயின் அலி 10 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

இவர்களை தொடர்ந்து ஆடிய மன்தீப் சிங்கும், கிராண்ட்ஹோமும் ஓரளவு தாக்குப் பிடித்தனர். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஐதராபாத் அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும், சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், ரஷித் கான், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, பெங்களூர் அணியை வீழ்த்தி பிளே ஆப்ஸ் சுற்றை உறுதி செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. #IPL2018 #SRHvRCB

Similar News