செய்திகள்
அப்பவே அந்த மாதிரி சீட்டிங் செய்த ஆஸி அணியின் புதிய கோச் ஜஸ்டின் லங்கர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் லங்கர், இலங்கைக்கு எதிரான போட்டி ஒன்றில் சீட்டிங் செய்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது. #JustinLanger
தென் ஆப்பிரிக்காவுடனான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னரின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது வீடியோவில் தெளிவாக தெரிந்தது. பந்தை சேதப்படுத்தியதை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, பந்தை சேதப்படுத்திய புகார் தொடர்பாக ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. மேலும், பந்தை சேதப்படுத்திய பான்கிராப்டுக்கு 9 மாதம் விளையாடவும் தடை விதித்தது. இந்த தவறுக்கு பொறுப்பேற்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த டேரன் லிமேன் பதவி விலகினார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லேங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜஸ்டின் லங்கர் ஆஸ்திரேலிய அணியில் விளையாடிய போது செய்த சேட்டை ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இலங்கைக்கு எதிராக கில்கிறிஸ்ட் தலைமையில் ஆஸ்திரேலியா விளையாடிய ஒரு போட்டியில், ஸ்டெம்ப் மீது வைக்கப்பட்டுள்ள பெயில்ஸ் திடீரென கீழே கிடக்கும். அது எப்படி கீழே விழுந்தது என அம்பயர் முதல் அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களும் குழம்பி மைதானத்தில் நின்று கொண்டிருப்பர்.
பீல்டிங் நின்று கொண்டிருந்த ஜஸ்டின் லங்கர் தனது கைகளால் பெயில்சை கீழே தள்ளிவிடுவது பின்னர் தெரியவரும். ஆனால், ஜஸ்டின் லங்கர் தனக்கு எதுவுமே தெரியாதது போல நின்று கொண்டிருப்பார். இதனை கலாய்த்து ஆஸ்திரேலியா என்றாலே சீட்டிங்தான் என்ற கருத்துக்களுடன் பழைய மேட்ச் வீடியோ தற்போது பரவி வருகிறது.
சீட்டிங் செய்து மாட்டிக்கொண்டு பயிற்சியாளர் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பயிற்சியாளர் பழைய சீட்டிங் பிரபலமாக உள்ளார் என்றும் பலர் கிண்டலடித்துள்ளனர். அந்த வீடியோ கீழே #CricketAustralia #JustinLanger