செய்திகள்

ஐபிஎல் போட்டி மழையால் மீண்டும் நிறுத்தம் - டெல்லி டேர்டெவில்ஸ் 17.1 ஓவரில் 196/6

Published On 2018-05-02 17:42 GMT   |   Update On 2018-05-02 17:42 GMT
ஐபிஎல் தொடரில் டெல்லியில் இன்று நடைபெற்றுவரும் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 17.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. #IPL2018 #DDvRR #VIVOIPL

புதுடெல்லி:

ஐ.பி.எல். போட்டியின் 32-வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க இருந்தது. இதில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால், டெல்லியில் மழை பெய்து வருவதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 9 மணியளவில் மழை குறைந்தது. இதையடுத்து, மைதானத்தை சோதித்த நடுவர்கள் இரவு 9:30 மணியளவில் ஆட்டம் தொடங்கும் என அறிவித்தனர். மேலும் இந்த போட்டியில் 18 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. 



இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, கொலின் முன்ரோ ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை குல்கர்னி வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் முன்ரோ கோல்டன் டக் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினர். அவர் பிரித்வி ஷா உடன் இணைந்து அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். 

3-வது ஓவரை குல்கர்னி வீச அந்த ஓவரில் பிரித்வி ஷா 2 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார், இதனால் அந்த ஓவரில் டெல்லி அணிக்கு 16 ரன்கள் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஜெய்தேவ் உனத்கட் வீசிய 5-வது ஓவரின் கடைசி மூன்று பிரித்வி ஷா அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். ஆறாவது ஓவரை ஷ்ரேயாஸ் கோபால் வீச அந்த ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் இரண்டு சிக்ஸர் அடித்தார். இதனால் ஆறு ஓவர்களில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் குவித்தது.

சிறப்பாக விளையாடிவந்த பிரித்வி ஷா 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷ்ரேயாஸ் கோபால் பந்தில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். அதன்பின் ரிஷப் பாண்ட் களமிறங்கினார். அவரும் அதிரடியில் இறங்க டெல்லி அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. டெல்லி அணி 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது. 13-வது ஓவரை குல்கர்னி அந்த ஓவரில் டெல்லி அணிக்கு 20 ரன்கள் கிடைத்தது. 



அதிரடியாக விளையாடிய பாண்ட் 23 பந்தில் அரைசதம் கடந்தார். அவரைத்தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யரும் அரைசதம் அடித்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 50 ரன்களில், உனத்கட் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் வெளியேறிய மூன்றாவது பந்தில் பாண்ட்டும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் அந்த ஓவரில் உனத்கட்டுக்கு இரண்டு விக்கெட்கள் கிடைத்தது. அப்போது டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்தது.

இறுதி கட்டத்தில் விஜய் சங்கர், மேக்ஸ்வெல் ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் இறங்கினர். ஜோப்ரா ஆர்சர் வீசிய 16-வது ஓவரில் விஜய் சங்கர் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் டெல்லி அணிக்கு 15 ரன்கள் கிடைத்தது. விஜய் சங்கர் 6 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணி 17.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையின் காரணமாக ஆட்டம் மீண்டும் தடைபட்டது. ராஜஸ்தான் அணி பந்துவீச்சில் உனத்கட் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். #IPL2018 #DDvRR #VIVOIPL
Tags:    

Similar News