ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே

Published On 2018-04-30 13:46 IST   |   Update On 2018-04-30 13:46:00 IST
தொடக்க வீரராக களம் இறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் அணியை பெற வைக்க முடியாத வீரர் என்ற மோசமான சாதனையை ரகானே படைத்துள்ளார். #IPL2018 #RR
ஐபிஎல் தொடரின் 28-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நேர்த்தியான பந்து வீச்சு, பீல்டிங்கால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ரகானே 53 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.



ஐபிஎல் தொடரில் இதற்கு முன்பு ஒரு முறையும் தொடக்க வீரராக களம் இறங்கி 50 ரன்களுக்கு மேல் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் நின்ற ரகானேயால் அணியை வெற்றி பெற வைக்க முடியாமல் போன சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்றைய ஆட்டம் மூலம் 2-வது முறையாக ரகானேயால் வெற்றி பெற வைக்க முடியாமல் போகியுள்ளது.

இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு முறை தொடக்க வீரராக களம் இறங்கி, 50 ரன்களுக்கு மேல் ரன்குவித்து, கடைசி வரை அவுட்டாகாமல் அணியை வெற்றி பெற வைக்க முடியாத ஒரே வீரர் என்ன மோசமான சாதனையை ரகானே படைத்துள்ளார். #IPL2018 #RR #Rahane

Similar News