செய்திகள்

பேட்டிங்கில் புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

Published On 2018-04-20 22:43 GMT   |   Update On 2018-04-20 22:43 GMT
புனேவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து, குறைவான ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. #VivoIPL #ChennaiSuperKings

புனே:

ஐபிஎல் தொடரின் 17-வது ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் சதமடித்தார். 

106 ரன்கள் எடுத்து வாட்சன் கடைசி ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும். 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ராஜஸ்தான் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 

இப்போட்டியில், முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாட்சன் ராஜஸ்தான் அணி பவுலர்களை திணறடிக்க, சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சென்னை அணி 13 ஓவர்களில் 150 ரன்கள் குவித்தது. இதையடுத்து, குறைவான ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக 13.1 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்தது. கடந்த 2010ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 13.5 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. #VivoIPL #ChennaiSuperKings
Tags:    

Similar News