ஐ.பி.எல்.(IPL)
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் பாதுகாப்பிற்கு மத்திய பாதுகாப்பு படை?
சென்னையில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்குமாறு ஐபிஎல் நிர்வாகம் கேட்டுள்ளதாக தெரிகிறது. #IPL2018 #CSK
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில்தான் இன்று ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
இந்த போட்டியை நடத்தக்கூடாது, ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிக அளவில் எழுந்துள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம், தமிழக அரசு, ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிக்கப்பட்டு விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இன்று நடைபெற இருக்கும் போட்டிக்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்னும் 6 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. போராட்டம் வலுத்து வருவதால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா டெல்லியில் இன்று உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை சந்தித்தார். அப்போது சென்னை ஐபிஎல் போட்டிகளுக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ராஜீவ் சுக்லா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் சென்னையில் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க வாய்ப்பு உள்ளது.