செய்திகள்

தென்ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்- தேனீர் இடைவேளை வரை 153-2

Published On 2018-03-10 19:01 IST   |   Update On 2018-03-10 19:01:00 IST
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. #SAvAUS
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

ரபாடாவின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் 71.3 ஓவர்கள் தாக்குப்பிடித்து 243 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ரபாடா 96 ரன்கள் விட்டுகொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். ரிவரி்ஸ் ஸ்விங் மூலம் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரை நிலைகுலையச் செய்தார்.

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 11 ரன்னுடனும், நைட்வாட்ச்மேன் ரபாடா 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ரபாடா 29 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். 3-வது விக்கெட்டுக்கு டீன் எல்கர் உடன் அம்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மிகவும் பொறுமையாக விளையாடியது. இதனால் ஸ்கோர் மிகவும் மந்தமான நிலையில் உயர்ந்தது.



33 ஓவரில் 100 ரன்னைத் தொட்ட தென்ஆப்பிரிக்கா, 61.1 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. அம்லா 122 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரிகளுடனும், டீன் எல்கர் 164 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரிகளுடனும் அரைசதம் அடித்தனர்.

2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை தென்ஆப்பிரிக்கா 66 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது. அம்லா 54 ரன்னுடனும், டீன் எல்கர் 57 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. அம்லா (56), டீன் எல்கர் (57) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தென்ஆப்பிரிக்கா 70 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. #SAvAUS #AUSvSA #Amla #Elgar

Similar News