செய்திகள்

ஆசிய மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகட்

Published On 2018-03-01 12:22 GMT   |   Update On 2018-03-01 12:22 GMT
கிர்கிஸ்தான் நாட்டில் நடந்து வரும் ஆசிய மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் வினேஷ் போகட் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
புதுடெல்லி:

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் 2014-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றார். இந்நிலையில், கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பிஸ்கெக் நகரில் ஆசிய மல்யுத்தம் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் வினேஷ் போகட் கலந்து கொண்டார்.

தற்போது, 50 கிலோ பெண்கள் எடைப்பிரிவில் ஜப்பான் வீராங்கனை யுகி ஐரீ-யை அரையிறுதிப்போட்டியில் வீழ்த்தியன் மூலம்இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதனால், போட்டி முடிவில் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை வினேஷ் போகட் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே, ஆசிய போட்டியில் வெண்கலம் வென்றுள்ள வினேஷ் போகட் இனி தங்க பதக்கத்துக்காக சீனாவை சேர்ந்த சுன் லீ-யுடன் மோத இருக்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனை 59 கிலோ எடைப்பிரிவில் கொரிய வீராங்கணையுடன் வெண்கலப்பதக்கத்திற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற கீதா போகட், பபிதா குமாரி ஆகியோரின் உறவினர் தான் வினேஷ் போகட் என்பது குறிப்பிடத்தக்கது. #VineshPhogat  #AsianWrestling
Tags:    

Similar News