செய்திகள்

வங்காள தேச அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக வால்ஷ் நியமனம்

Published On 2018-02-26 14:53 GMT   |   Update On 2018-02-26 14:53 GMT
வங்காள தேச கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக வால்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் முத்தரப்பு தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.#NidahasTrophy
இலங்கையில் அடுத்த மாதம் 6-ந்தேதி முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை, இந்தியா, வங்காள தேச அணிகள் மோதுகின்றன. இதற்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாகிப் அல் ஹசன் காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த சந்திகா ஹதுருசிங்கா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இலங்கை அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

அவருக்குப் பதிலாக புதிய பயிற்சியாளரை வங்காள தேச அணி தேர்வு செய்யாமல் இருந்தது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வால்ஷ்-ஐ இடைக்கால தலைமை பயிற்சியாளராக நிமியத்துள்ளது. இவர முத்தரப்பு டி20 தொடரின்போது வங்காள தேச தலைமை பயிற்சியாளராக செயல்படுவார்.
Tags:    

Similar News