செய்திகள்

ராகுல் டிராவிட்டின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது பிசிசிஐ

Published On 2018-02-25 11:25 GMT   |   Update On 2018-02-25 11:25 GMT
அனைவருக்கும் ஒரே மாதிரியான பரிசுத் தொகை வழங்க வேண்டும் என்று ராகுல் டிராவிட் விடுத்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக் கொண்டது. #BCCI #IndiaU19
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜனவரி முதல் இந்த மாதம் தொடக்கம் வரை நடைபெற்றது. இதில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்திய அணி சிறப்பாக விளையாடியதற்காக பிசிசிஐ அவர்களுக்கு பரிசு அறிவித்தது. வீரர்களுக்கு தலா 30 லட்சம் ரூபாயும், தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம் ரூபாயும், துணை பயிற்சியாளர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கு 20 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்தது.

பரிசுத் தொகையில் உள்ள பாகுபாடு ராகுல் டிராவிட்டுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அனைவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதிக அளவில் உழைத்தார்கள். இதனால் ஒரே மாதிரியான பரிசுத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் ராகுல் டிராவிட்டின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. அதன்படி அனைத்து ஸ்டாஃப்களுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பைக்கு முன் ஜூனியர் வீரர்களுக்கு பயிற்சி அளித்த ராஜேஷ் சவந்த் மரணம் அடைந்தார். அவருடைய குடும்பத்திற்கும் 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News