செய்திகள்
வங்காள தேசத்துடனான 2-வது டெஸ்டில் இலங்கை வலுவான முன்னிலை
வங்காள தேசத்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 312 ரன்கள் கூடுதலாக பெற்று வலுவான முன்னிலை வகிக்கிறது.
டாக்கா:
வங்காள தேசம் - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
டாக்கா ஆடுகளம் முதல் ஓவரில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 222 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இலங்கை அணியில் குசால் மெண்டிஸ், ரோசன் டி சில்வா ஆகியோர் அரைசதம் அடித்தனர். வங்காள தேசம் அணி சார்பில் அப்துர் ரசாக், தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
அதன்பின்னர், வங்காள தேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். அந்த அணி 12 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காள தேசம் 4 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல்
வங்காள தேசம் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி சார்பில் சுரங்கா லக்மல், அகிலா தனஞ்செயா ஆகியோர் 3 விக்கெட்டுகளும், தில்ருவான் பெரார 2 விக்கெட்டும் கைப்பற்ரினர்.
இதையடுத்து, 112 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. வங்காள தேச வீரர்கள் சிறப்பாக பந்துவீசி இலங்கை அணியை கட்டுப்படுத்தினர். இதனால் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது.
ரோஷன் சில்வா 58 ரன்களுடனும், சுரங்கா லக்மல் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து, இலங்கை அணி வங்காள தேசத்தை விட 312 ரன்கள் கூடுதலாக பெற்று வலுவான முன்னிலையில் உள்ளது.
வங்காள தேசம் அணி சார்பில் முஸ்தபிகுர் ரகுமான் 3 விக்கெட்டும், தாஜுல் இஸ்லாம், ஹசன் ஆகியோர் 2 விக்கெட்டுகளும், அப்துர் ரசாக் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.