செய்திகள்

முதல் நாளிலேயே 14 விக்கெட்டுக்கள்: வங்காள தேசம் 4 விக்கெட்டை இழந்து திணறல்

Published On 2018-02-08 20:47 IST   |   Update On 2018-02-08 20:47:00 IST
டாக்கா டெஸ்டில் இலங்கை 222 ரன்களில் ஆல்அவுட் ஆன நிலையில், வங்காள தேசம் 56 ரன்னுக்குள் இழந்து 4 விக்கெட்டை இழந்துள்ளது. #BAVvSL
வங்காள தேசம் - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பேட்டிங் தேர்வு செய்தார்.

முதல் டெஸ்ட் நடைபெற்ற சிட்டகாங் ஆடகளம் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஆனால், டாக்கா ஆடுகளம் முதல் ஓவில் இருந்துதே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.

இதனால் இலங்கை அணி 222 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தொடக்க வீரர் குசால் மெண்டிஸ், 6-வது வீரராக களம் இறங்கிய ரோசன் டி சில்வா ஆகியோர் அரைசதம் அடித்தனர். வங்காள தேசம் அணி சார்பில் அப்துர் ரசாக், தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் வங்காள தேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரின் 3-வது பந்திலேயே தமிம் இக்பால் ஆட்டமிழந்தார்.



அடுத்து மொமினுல் ஹக்யூ களம் இறங்கினார். இவர் ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹிம் 1 ரன்னில் க்ளீன் போல்டானார்.

இதனால் 12 ரன்கள் எடுப்பதற்குள் வங்காள தேசம் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 4-வது விக்கெட்டுக்கு இம்ருல் கெய்ஸ் உடன் லித்தோன் தாஸ் ஜோடி சேர்ந்தார். முதல்நாள் ஆட்டம் முடிவதற்கு சற்று முன் கெய்ஸ் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

வங்காள தேசம் முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. இன்று முதல் நாளிலேயே 14 விக்கெட்டுக்கள் வீழ்ந்துள்ளது. நாளைய 2-வது நாள் ஆட்டத்திலும் விக்கெட்டுக்கள் மளமளவென விழ வாய்ப்புள்ளது.

Similar News