செய்திகள்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வங்காள தேச அணியில் 35 வயதான ரசாக் சேர்ப்பு

Published On 2018-01-29 15:11 IST   |   Update On 2018-01-29 15:11:00 IST
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்காள தேச அணியில் 35 வயதான மூத்த வீரர் அப்துர் ரசாக் இடம்பிடித்துள்ளார். #BANvSL #Razzak
வங்காள தேசம், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியின்போது முன்னணி சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் காயமடைந்தார். இதனால் கடைசி வீரராகத்தான் பேட்டிங் செய்தார்.

வருகிற 31-ந்தேதி வங்காள தேசம் - இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. சிட்டகாங்கில் நடைபெறும் இந்த டெஸ்டில் ஷாகிப் அல் ஹசன் கலந்து கொள்ளமாட்டார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில் ஷாகிப் அல் ஹசனுக்குப் பதிலாக 35 வயது சுழற்பந்து வீச்சாளரான அப்துர் ரஹ்மானை வங்காள தேசம் சேர்த்துள்ளது. அப்துர் ரசாக் கடைசியான கடந்த 2014-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடினார். அதன்பின் தற்போதுதான் அணியில் இடம்பிடித்துள்ளார். #BANvSL #Razzak

Similar News