செய்திகள்

ஐ.எஸ்.எல் கால்பந்து: கோவாவை வீழ்த்தியது மும்பை எப்.சி.

Published On 2018-01-29 01:40 IST   |   Update On 2018-01-29 05:44:00 IST
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை எப்.சி. அணி 4-3 என்ற கணக்கில் கோவா அணியை வீழ்த்தியது. #ISL2017 #MumbaiCity #Goa
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை எப்.சி. அணி 4-3 என்ற கணக்கில் கோவா அணியை வீழ்த்தியது.

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று கோவாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை எப்.சி. மற்றும் கோவா அணிகள் மோதின.



இந்தப் போட்டியில் கோவா அணி சார்பில் கொரொமினாஸ், புருனோ, பெர்னாண்டஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஆனால், மும்பை எப்.சி. அணியின் சார்பில் சாண்டொஸ் இரண்டு கோல்களும், எமானா ஒரு கோல் அடித்தனர். இதையடுத்து போட்டி சமனில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் மும்பை அணியின் பல்வந்த் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இந்த கோல் மும்பை அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இதையடுத்து, இந்த போட்டியில் மும்பை அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதேபோல், மேற்குவங்கத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஏ.டி.கே. அணியும், ஜாம்ஷெட்பூர் அணியும் மோதின. இதில் ஜாம்ஷெட்ப்பூர் அணி சார்பில் மாத்யூஸ் கான்கிளேவ்ஸ் ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் ஏ.டி.கே. அணியை வீழ்த்திய ஜாம்ஷெட்பூர் அணி 19 புள்ளிகளுடன் பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது.

Similar News