செய்திகள்

ஐபிஎல் ஏலம் 2-வது நாள்: நல்ல விலைக்கு எடுக்கப்பட்ட தமிழக வீரர்கள்

Published On 2018-01-28 11:11 IST   |   Update On 2018-01-28 11:11:00 IST
ஐபிஎல் ஏலம் இன்றைய 2-வது நாளில் தமிழகத்தைச் சேர்ந்த முருகன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் கோடியில் ஏலம் எடுக்கப்பட்டனர். #iplauction #iplauction2018
ஐபிஎல் வீரர்கள் ஏலம் இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்டார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த சழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வினை  2.2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.



18 வயதே ஆன வாஷிங்டன் சுந்தரின் அடிப்படை விலை 1.5 கோடி ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முதலில் வாஷிங்டன் சுந்தரை ஏலம் எடுக்க அணிகள் யோசித்தனர். பின்னர் மும்பை, பஞ்சாப், ஆர்சிபி அணிகள் ஆர்வம் காட்டினார்கள்.

இறுதியில் வாஷிங்டன் சுந்தரை ரூ. 3.2 கோடி ரூபாய் கொடுத்து ஆர்சிபி வாங்கியது.

ஆனால் தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் சிறப்பாக பந்து வீசிய சாய் கிஷோரை எந்த அணி உரிமையாளர்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. #MI #CSK #DD #KKR #RR #RCB #KXIP #SRH

Similar News