செய்திகள்

26 வயது இளம் வீரரை விட 36 வயதான டோனி வேகமாக ஓடக்கூடியவர்: ரவி சாஸ்திரி

Published On 2017-12-25 17:49 IST   |   Update On 2017-12-25 17:49:00 IST
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் டோனி, 26 வயது இளம் வீரரை விட உடற்தகுதியிலும், வேகத்திலும் சிறந்தவர் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இவர், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். 36 வயதாகும் டோனி சில போட்டிகளில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இதனால் அவருக்கு எதிராக விமர்சனம் வந்த வண்ணம் உள்ளது. முன்னாள் வீரர்கள் சில டோனி போட்டியில் இருந்த விலகி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.



இந்நிலையில் டோனி 26 வயது இளம் வீரரரை விட வேகமாக ஓடக்கூடியவர் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.



இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘நாங்கள் முட்டாள்கள் அல்ல. நான் கடந்த 30 முதல் 40 ஆண்டுகள் கிரிக்கெட்டை பார்த்துக் கொண்டு வருகிறேன். இன்னும் 10 ஆண்டுகள் விராட் கோலி இந்திய அணியின் ஒரு அங்கமாக இருப்பார். 36 வயதிலும் 26 வயதான இளம் வீரரை டோனியால் வெல்ல முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். அவரைப் பற்றி பேசும் முன்னாள் வீரர்கள், அவர்கள் விளையாடியதை மறுந்து விட்டு பேசுகிறார்கள்.



நாம் 36 வயதில் நம்மால் செய்ய முடியும். கண்ணாடி முன் நின்று, வேகமாக இரண்டு ரன்கள் ஓட முடியுமா? என்று அவர்கள் கேட்க வேண்டும். ஆனால், இரண்டு ரன்கள் ஓடுவதற்குள், டோனி மூன்று ரன்கள் ஓடிவிடுவார். டோனி மட்டும்தான் இரண்டு உலகக்கோப்பை வாங்கி கொடுத்துள்ளார். சராசரி 51 ரன்களுக்கு மேல் வைத்துள்ளார். தற்போதைய நிலையில் ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பரை மாற்ற வேண்டிய தேவையில்லை’’ என்றார்.

Similar News