செய்திகள்

டி20 கிரிக்கெட்டில் 47 வயதில் விக்கெட் வீழ்த்தி சாதனைப் புரிந்த பிராட் ஹாக்

Published On 2017-12-22 12:09 GMT   |   Update On 2017-12-22 12:09 GMT
ஆஸ்திரேலிய அணியின் இடது கை விரிஸ்ட் ஸ்பின்னரான பிராட் ஹாக் 46 வயது 318 நாளில் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் இடது கை விரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக். தற்போது 46 வயதாகும் இவர் சர்வதேச போட்டியில் இடம்பிடிக்காவிடிலும், ‘பிக் பாஷ்’ டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார். 1996-ம் ஆண்டு தனது 27 வயதில் ஆஸ்திரேலியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி வரை ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடினார். அதன்பின் சர்வதேச போட்டியில் விளையாடவில்லை.



தற்போது நடைபெற்று வரும் ‘பிக் பாஷ்’ டி20 லீக் தொடரில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.



தொடக்க வீரராக களம் இறங்கிய டி'ஆர்சி ஜான் மேத்யூ ஷார்ட்-ஐ 34 ரன்னில் பிராட் ஹாக் வெளியேற்றினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக வயதில் விக்கெட்டை வீழ்த்தி பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு அஜித் எகநாயககே 46 வயது 176 நாட்களில் டி20 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இவர்தான் மிகவும் அதிகமான வயதில் விக்கெட் வீழ்த்திய வீரராக இருந்தார். தற்போது பிராட் ஹாக் 46 வயது 318 நாளில் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
Tags:    

Similar News