செய்திகள்

கிரிக்கெட் வாரிய பொருளாளருக்கு கோர்ட்டு உத்தரவு

Published On 2017-11-30 04:38 GMT   |   Update On 2017-11-30 04:39 GMT
இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அனிருத் சவுத்ரி, தலைமை நிதி அதிகாரி சந்தோஷ் ரங்னெகரை மிரட்டியதாக கூறப்படும் புகார் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டனர்.
லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்துவதை கண்காணிக்க கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டியினருக்கும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை.

இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது, இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அனிருத் சவுத்ரி, தலைமை நிதி அதிகாரி சந்தோஷ் ரங்னெகரை மிரட்டியதாக கூறப்படும் புகார் நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அனிருத் சவுத்ரி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் புனீத் பாலி, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன் அவர் ஒரு போதும் சந்தோஷ் ரங்னெகரை மிரட்டவில்லை என்று வாதிட்டார்.

இதன் பின்னர் நீதிபதிகள், புகார் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி அனிருத் சவுத்ரிக்கு உத்தரவிட்டனர். கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய விதிமுறைகளை வகுப்பது தொடர்பான விவகாரம் குறித்து அடுத்த ஆண்டு ஜனவரி 2-வது வாரத்தில் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
Tags:    

Similar News