செய்திகள்
கிளப்பிற்கு வெளியே தாக்குதலில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ்: வீடியோ வெளியீடு
பிரிஸ்டோலில் கிளப்பிற்கு வெளியே மர்ம நபர் ஒருவருடன் தாக்குதலில் ஈடுபட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். மைதானத்தில் அதிரடியாக பேட்டிங் மற்றும் பந்து வீசி அணிக்கு வெற்றித் தேடிதரும் இவர், அடிக்கடி விமர்சனத்தில் ஈடுபடுது உண்டு. மைதானத்தில் சக வீரர்களுடன் தகராறில் ஈடுபடும் இவர், மைதானத்திற்கு வெளியே கிளப்புகளில் சண்டையில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதும், பென் ஸ்டோக்ஸ் சக நாட்டு வீரர் ஹேல்ஸ் உடன் இணைந்து கிளப் சென்றுள்ளார்.
கிளப்பில் இருந்து வெளியே வந்த பென் ஸ்டோக்ஸிற்கும் இன்னொரு நபருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த பென் ஸ்டோக்ஸ் அந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அந்த நபருக்கு அதிக அளவில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் பென் ஸ்டோக்ஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் வெளியிட்டனர்.
இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பென் ஸ்டோக்ஸ் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.