செய்திகள்

வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் பிலாண்டர் விளையாடவில்லை

Published On 2017-09-19 10:52 GMT   |   Update On 2017-09-19 10:52 GMT
வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் இடம்பெறமாட்டார் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தொடரின்போது பிலாண்டருக்கு காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் இன்னும் சரியாகாததால் பிலாண்டர் பங்கேற்க முடியவில்லை.



காயம் அடைந்துள்ள மற்றொரு வீரரான ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸும் டெஸ்ட் தொடர் முழுவதும் பங்கேற்கமாட்டார். அவர் அக்டோபர் மாதம் இறுதியில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடருக்கு திரும்ப உள்ளார். நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கும் ஸ்டெயினும் அணியில் இடம்பெற மாட்டார்.

மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாவிடிலும் மோர்னே மோர்கல், காகிசோ ரபாடா, ஆலிவியம், பர்னெல், பெலுக்வாயோ மற்றும் ஹென்றிக்ஸ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
Tags:    

Similar News