செய்திகள்

பாகிஸ்தான் சென்று இலங்கை ஒரு டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது

Published On 2017-09-10 14:26 GMT   |   Update On 2017-09-10 14:26 GMT
பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச போட்டிகள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இலங்கை அணி ஒரு டி20 கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது.
இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணி மட்டும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

தற்போது பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் தொடங்குவதற்கான காலம் கனிந்துள்ளது. ஐ.சி.சி. உலக லெவன் அணியை பாகிஸ்தான் அனுப்ப சம்மதம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் - ஐ.சி.சி. உலக லெவன் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

அதன்பின் பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கிறது.

இதில் கடைசி டி20 போட்டி அக்டோபர் 29-ந்தேதி நடக்கிறது. இந்த போட்டி பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடைபெற இருக்கிறது. இதன்மூலம் பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச போட்டிகள் தொடர உள்ளது.
Tags:    

Similar News