செய்திகள்

4-வது ஒருநாள்: இந்தியா பேட்டிங்; ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், மணீஷ் பாண்டே சேர்ப்பு

Published On 2017-08-31 09:07 GMT   |   Update On 2017-08-31 09:07 GMT
இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், மணீஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் கேதர் ஜாதவ், புவனேஸ்வர் குமார், சாஹல் ஆகியோர் நீக்கப்பட்டு மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஷர்துல் தாகூருக்கு இதுதான் முதல் சர்வதேச போட்டியாகும்.


அறிமுகமான ஷர்துல் தாகூர்

இலங்கை அணியில் ஹசரங்கா சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் முணவீருா, புஷ்பகுமாரா ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். ஏற்கனவே முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
Tags:    

Similar News