செய்திகள்

உலக தடகள போட்டி: 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனைக்கு தங்கம்

Published On 2017-08-08 06:53 GMT   |   Update On 2017-08-08 06:53 GMT
லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன் ஷிப் தொடரில் பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யாவை சேர்ந்த வீராங்கணை தங்கம் வென்றார்.
லண்டன்:

உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனை பெய்த் கிபிஜியான் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 4 நிமிடம் 02.59 வினாடிகளில் கடந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த ஜெனீபர் சிம்சன் 4 நிமிடம் 02.76 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், தென்னாப்பிரிக்க வீராங்கனை காஸ்டர் செமன்யா 4 நிமிடம் 02.90 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.

டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் வெனிசுலா வீராங்கனை யூலிமர் ரோஜஸ் 14.91 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். கொலம்பியாவை சேர்ந்த கேட்ரின் 14.89 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கமும், ஒல்கா (கஜகஸ்தான்) 14.77 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலமும் பெற்றனர்.

சங்கிலி குண்டு எறிதலில் போலந்து வீராங்கனை விலோ மர்சிக் தங்கம் வென்றார். அவர் 77.90 மீட்டர் தூரம் எறிந்தார். சீன வீராங்கனை வாங் வெள்ளி பதக்கமும் (75.98 மீட்டர்), போலந்தை சேர்ந்த மால்வினா கோப்ரான் (74.76 மீட்டர்) வெண்கல பதக்கமும் பெற்றனர்.

ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் உமர் மெக்லியாட் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 13.04 வினாடியில் கடந்தார்.

செர்ஜி செபன் கோவ் 13.14 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கமும், பலாஸ் (அங்கேரி) 13.28 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.
Tags:    

Similar News