செய்திகள்

இந்திய தொடர்: இலங்கை அணிக்கு சிறப்பு பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்

Published On 2017-07-21 16:12 GMT   |   Update On 2017-07-21 16:12 GMT
இந்தியாவிற்கு எதிரான தொடருக்கான இலங்கை அணியின் சிறப்பு பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஐந்து ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஒரேயோரு டி20 போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.

டெஸ்ட் தொடர் வருகிற 26-ந்தேதி காலேயில் தொடங்குகிறது. கடந்த முறை இந்தியாவிற்கு எதிராக இலங்கை அணி டெஸ்ட் தொடரை 1-2 என இழந்தது. சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக ஒருநாள் தொடரை 2-3 என இழந்தது.

இதனால் இலங்கை அணியின் பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக அந்த அணியின் முன்னாள் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸை இந்தியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பு பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.

43 வயதாகும் சமிந்த வாஸ் இலங்கை அணிக்காக 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். 322 ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட்டுக்கள் கைப்பற்றி முத்திரை பதித்துள்ளார்.
Tags:    

Similar News