செய்திகள்

நடத்தை விதிமீறலில் சிக்கிய ரபாடாவுக்கு விளையாட தடை

Published On 2017-07-08 10:49 IST   |   Update On 2017-07-08 10:49:00 IST
ஐ.சி.சி.யின் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாட தென்னாப்ரிக்கா வீரர் ரபாடாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டன்:

இங்கிலாந்து சென்றுள்ள தென்னாப்ரிக்க அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 6-ம் தேதி தொடங்கியது. டாசில் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. கேப்டன் ஜோ ரூட் 190 ரன்களும், பென் ஸ்டோக் 56 ரன்களும், மோயின் அலி 87 ரன்களும், பிராட் 57 ரன்களும் சேர்த்து முதல் இன்னிங்ஸ்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 458 ரன்கள் குவித்தது. 

இந்த போட்டியில், சிறப்பாக பந்து வீசிய தென்னாப்ரிக்காவின் ககிசோ ரபாடா 3 விக்கெட் வீழ்த்தினார். இப்போட்டியின் முதல் இன்னிங்சின் 54-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரின் மூன்றாவது பந்தை ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார். அந்த பந்து பேட்டில் உறசி கீப்பரின் கையில் தஞ்சம் புகுந்தது. இதன்மூலம் ஸ்லோக்ஸ் அவுடாகி வெளியேறினார். 

இந்த சமயத்தில், ரபாடா, ஸ்டோக்ஸை பார்த்து தவறான வார்த்தைகளை உபயோகபடுத்தியுள்ளார். இது ஸ்டெம்பில் உள்ள மைக்கில் பதிவாகியுள்ளது. அவரின் இந்த செயல் ஐ.சி.சி.யின் நடத்தை விதிமீறலாகும். அவரின் இந்த செயலுக்காக அவருக்கு இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்டில் விளையாட நடுவர் குழுவினர் தடை விதித்துள்ளனர். அவர் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை.

இந்த தடையின் மூலம் ரபாடா, ஐ.சி.சி.யின் நடத்தை வீதிமீறலுக்காக விளையாட தடை விதிக்கப்படும் இரண்டாவது வீரராகிறார். 2016-ம் ஆண்டும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் இந்த நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது.

இதற்கு முன்னதாக இலங்கையின் டிக்வெல்லா மற்றும் ரபாடா இடையேயான பிரச்சனையால், டிக்வெல்லாவிற்கு 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

Similar News